Advertisement Contact

புதிய போஸ்ட் பெய்ட் சலுகைகளை அறிமுகம் செய்ய உள்ள பிஎஸ்என்எல்

புதிய சலுகைகள்... பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய போஸ்ட் பெய்ட் சலுகைகளை அறிமுகம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் டிசம்பர் 1-ம் தேதி ரூபாய் 798 மற்றும் ரூபாய் 999 என்ற விலைக்கு புதிய போஸ்ட் பெய்ட் சலுகைகளை அறிமுகம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு புதிய சலுகைகளும் டேட்டா டாக்டைம் தவிர பல்வேறு இதர பலன்களை வழங்கும் என தெரிகிறது.

புதிய சலுகை தவிர ரூபாய் 199 போஸ்ட்பெய்டு சலுகை மாற்றம் செய்யப்பட்டு டேட்டா ரோல் ஓவர் பலன்கள் வழங்கலாம் எனவும், பிஎஸ்என்எல் சலுகை அறிமுகமானதும் ரூபாய் 99, ரூபாய் 225, ரூபாய் 325, ரூபாய் 699 மற்றும் ரூபாய் 1125 போன்ற சலுகைகள் நீக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது

மேலும் பிஎஸ்என்எல் புதிய சலுகை நாடு முழுவதும் அனைத்து வட்டாரங்களிலும் அறிவிக்கப்பட இருக்கிறது. ரூபாய் 798 என்னும் சலுகையில் 50 ஜிபி முதல் 150 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் வசதி, 100 எஸ்எம்எஸ் போன்ற வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ரூபாய் 999 சலுகையில் 75 ஜிபி முதல் 525 ஜிபி டேட்டா வரை ரோல் ஓவர் வசதியில் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் போன்று இணைப்புகளும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.