Advertisement Contact

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய இயற்கை வழிமுறை

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய இயற்கை வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கை நறுக்கி அதனை முகத்தில் 15 நிமிடம் தேய்த்த பின்னர் காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும்.

வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.

கொத்துமல்லி மற்றும் மஞ்சள் கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட்செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவ வந்தால் கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.

எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரையை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.