Advertisement Contact

கூல்பேட் நிறுவனத்தின் எஸ் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் வெளியீடு

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான கூல்பேட் நிறுவனம் கூல்பேட் எஸ் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இதன் சிறப்புகள் பற்றி பார்க்கலாம்.

கூல்பேட் கூல் எஸ் ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டதாகவும், மேலும் முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறனைக் கொண்டதாகவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி60 சிப்செட் மூலம் இயங்குவதாக உள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு ஆக்டோ கோர் சிப்செட் மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியினைக் கொண்டதாகவும் 256ஜிபி வரை மெமரி நீட்டிக்கக் கூடியதாகவும் உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயங்குவதாக உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48 எம்பி முதன்மை சென்சார் கேமரா, முன்புறத்தில் 25 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை வலது புறத்தில் கைரேகை ஸ்கேனர் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டதாகவும், மேலும் 10வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

கூல்பேட் கூல் எஸ் ஸ்மார்ட்போன் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை யூஎஸ்பி டைப்சி போர்ட், 4ஜி வோல்ட் கொண்டு உள்ளது. கூல்பேட் கூல் எஸ் ஸ்மார்ட்போன் மூன் ஒயிட், லாபிஸ் ப்ளூ மற்றும் நைட் பிளாக் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.