Advertisement Contact

பாக்பஜார் பகுதியில் உள்ள குடிசை வீடுகள் பயங்கர தீவிபத்து

பயங்கர தீவிபத்து... கொல்கத்தாவின் பாக்பஜார் பகுதியில் உள்ள குடிசை வீடுகள் அதிகமுள்ள குடியிருப்புப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40 வீடுகள் தீக்கிரையாகின.

25 தீயணைப்பு வாகனங்களில் வந்த 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாகப் போராடினர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிர்ச்சேதம் ஏதுமின்றி தீ அணைக்கப்பட்டது.

வீடுகளில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் தீ வேகமாகப் பரவியதாக கூறப்படுகிறது.