Advertisement Contact

வாடிக்கையாளர் வீட்டிற்கு முன்பே உணவை பிரித்து சாப்பிட்ட டெலிவரி ஊழியர்

செமத்தியாக மாட்டிய டெலிவரி ஊழியர்... இங்கிலாந்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய வேண்டிய பர்கரை, மெக் டொனால்ட்ஸ் ஊழியர் ஒருவர் பிரித்து சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கென்டிஷ் டவுனை சேர்ந்த பெண் ஒருவர் மெக் டொனால்ட்ஸில் ஆன்லைன் மூலம் பர்கர் ஆர்டர் கொடுத்துள்ளார். அதனை டெலிவரி செய்ய வாடிக்கையாளரின் வீடு வரை பார்சலை எடுத்துச் சென்ற ஊழியர், திடீரென ஆர்டரை ரத்து செய்துள்ளார்.

அத்தோடு அந்த பார்சலையும் பிரித்து வாடிக்கையாளர் வீட்டு முன்பே அமர்ந்து சாப்பிட்டுள்ளார். இதனை அந்த வாடிக்கையாளரே மாடியில் இருந்து வீடியோ எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.