Advertisement Contact

கொரோனா பரவல் மோசமாக உள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் கவலை

கொரோனா பரவல் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் கவலை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலத்தில் ஐரோப்பிய நாடுகள் அதனைப் பரவலாக கட்டுப்படுத்திவிட்டன. இதனால் மற்ற உலக நாடுகளுக்கு முன்பாகபே ஐரோப்பிய நாடுகள் கொரோனா முடக்கத்திலிருந்து தளர்வுகள் அறிவிக்கத் தொடங்கின.

ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியது. இதில் பிரிட்டன் கடுமையாக பாதிக்கப்பட்டது. தினசரி கொரோனா பாதிப்புகள் மற்றும் மரணங்கள் அதிகரிக்கத் தொடங்கின.

இதனைத் தொடர்ந்து மீண்டும் பொது முடக்கத்தை அறிவித்தது பிரிட்டன். இதற்கிடையே பிரிட்டனில் உருமாறிய புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது.

இது முந்தைய கொரோனா வகையை விடவும் மிகத் தீவிரமாகப் பரவியது. தற்போது கொரோனா மரணங்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று மற்றும் 1,820 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். பிரிட்டனில் கொரோனா மரணங்கள் ஒரு இலட்சத்தை நெருங்கியுள்ளது.

கொரோனாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கவலை தெரிவித்துள்ளார்.