Advertisement Contact

சென்னை அருகே வீட்டிலேயே துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்ட இளைஞரால் பரபரப்பு

வீட்டில் துப்பாக்கி பயிற்சி எடுத்த இளைஞர்... சென்னையை அடுத்த அம்பத்தூர் அருகே இளைஞர் ஒருவர் வீட்டிலேயே துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் துப்பாக்கிப் பயிற்சி மேற்கொள்ள இரண்டு உயர் ரக ஏர் கன் உட்பட 3 ஏர் கன்னை வாங்கி வீட்டிலேயே பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

இவர் பயிற்சி மேற்கொள்ளும் போது நிஜ துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் கேட்பதால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அம்பத்தூர் உதவி ஆணையரை புகார் அளித்தனர். புகாரின் அடைப்படையில் தமிழ்ச்செல்வன் வீட்டில் சோதனை செய்த காவல்துறையினர் 3 ஏர்கன்னை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து தமிழ்செல்வனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

ஏர் கன் பயன்படுத்த உரிமம் தேவையில்லை என்றாலும் தற்போது பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு ஏர் கன் பயன்படுத்தப்பட்டு வருகிறது .

விலங்குகளை வேட்டையாடவும் பயன்படுத்தப்படுகிறது . எனவே பயிற்சி காக ஏர் கன் வாங்கினாரா அல்லது வேறு காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் ஏர் கன் பயன்படுத்தியதால் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது .