Advertisement Contact

ஹூவாய்-ன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன் வரும் 22ம் தேதி வெளியீடு

ஹூவாய்-ன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன்... உள்மடிப்பு வடிவமைப்போடு ஹூவாய் மேட் எக்ஸ் 2 ஸ்மார்ட்போன் என அழைக்கப்படும் ஹூவாய் மடிக்கக்கூடிய சாதனம் வரும் 22ம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்று வெளியீட்டு நிகழ்வு சீனாவில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹூவாய் மேட் எக்ஸ் 2 உள்மடிப்பு வடிவமைப்போடு வரும் எனவும் இது கிரீன் 9000 சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 என்எம் செயல்முறை அடிப்படையில் ஹூவாய் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கிரின் 9000 எஸ்ஓசி-ஐ அறிமுகம் செய்தது.

ஹூவாய் மேட் எக்ஸ் 2 மாடல் 8.01 இன்ச் மடிப்பு திறை 2480 x 2220 தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவுடன் வரும் என கூறப்படுகிறது. வெளிப்புற தோற்றம் டிஸ்ப்ளே 6.45 இன்ச் அளவில் இருக்கும் எனவும் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் உடன் இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஹூவாய் மேட் எக்ஸ் 2 சாதனம் 16 மெகாபிக்சல் முன்புற கேமரா கொண்டிருக்கும் எனவும் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 10 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா, 12 மெகாபிக்சல் நான்காம் நிலை கேமரா, 8 மெகாபிக்சல் ஐந்தாம் நிலை கேமரா ஆகியவை இடம்பெறும் என கூறப்படுகிறது.

ஹூட்டின் தகவலின்படி, சாதனம் கிரீன் 9000 சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் இது 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 4400 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.