அவரைக்காய் அதிக அளவில் நார்ச் சத்துகளைக் கொண்டுள்ளது, இதனை சாப்பிட்டு வந்தால் தசை வலுப்படுவதோடு உடல் எடையும் குறையச் செய்யும். இப்போது அவரைக்காயில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
அவரைக்காய் - கால் கிலோ
பச்சை மிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 10
கடுகு – ½ ஸ்பூன்
கறிவேப்பிலை - கைப்பிடியளவு
பெருங்காயம் – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை: அவரைக்காயை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
அடுத்து கடுகு, கறிவேப்பிலை, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் தெளித்து வேகவிடவும். 5 நிமிடங்கள் கழித்து வேகவிட்டு இறக்கினால் அவரைக்காய் பொரியல் ரெடி.