Advertisement Contact

கூந்தல் பராமரிப்பிலும் தனியிடம் பிடிக்கும் மருதாணியின் மகிமை

கூந்தல் பராமரிப்பிலும் மருதாணிக்கு தனியிடம்... பழங்காலத்தில் இருந்தே அழகுக் குறிப்பில் முக்கியப் பங்கு வகிப்பது மருதாணி. விழாக் காலங்களில் கைகளில் அரைத்து வைத்துக் கொள்ள பயன்படுத்தப்பட்ட மருதாணி, கூந்தல் பராமரிப்பிலும் இன்றியமையாததாக மாறிவிட்டது.

பல இடங்களில் மருதாணி கிடைக்காததால், அவை தற்போது பொடி வடிவில் விற்கப்படுகிறது. இது முடிக்கு ஊட்டச்சத்து அளிப்பதோடு பல நன்மைகளை தருகிறது. அதன் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

முடி வளர்ச்சியை தூண்டும் பண்பு மருதாணியில் இயற்கையாகவே இருக்கிறது. அதனை பேக் ஆக போடலாம். இல்லையெனில் மருதாணி பொடியை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து இதமான சூட்டோடு கூந்தலில் தடவ வேண்டும். வாரம் 2 முறை இதை செய்தால் முடி வளர்ச்சியடையும்.
 
அதே போல பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் முடி கொட்டுதல் பிரச்னையை மருதாணி கட்டுப்படுத்தும். கடுகு எண்ணெயுடன் சேர்த்து கூந்தலில் மசாஜ் செய்தால் முடிவு உதிருவது குறையும். பொதுவாக தலைக்கு குளித்த பிறகு முடி ட்ரை ஆகாமல் தடுக்க கண்டிஷனர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மருதாணி பயன்படுத்தினால் கண்டிஷனர் தேவையே இல்லை. தேயிலை தூளை மருதாணியுடன் கலந்து தயிர் சேர்த்து தலையில் பேக்- ஆக போடும் போது உச்சந்தலையில் ஆழமான கண்டிஷனராக மருதாணி செயல்படும்.

மருதாணி பொடுகுத் தொல்லையையும் போக்கும். ஊறவைத்த வெந்தயம், கடுகு எண்ணெய், மருதாணி தூள் சேர்த்து முடிவில் தடவி ஊறவைத்த பிறகு தலைக்கு குளித்தால் பொடுகு தொல்லை ஓய்ந்து விடும். மருதாணியில் ஆண்டி மைக்ரோபியல் தன்மை இருக்கிறது. இது தலையில் ஏற்படும் அரிப்பு தன்மையை தடுக்க உதவுகிறது.

மருதாணியுடன் துளசியை சேர்த்து அரைத்து உச்சந்தலையில் தடவினால் அரிப்பு நீங்கும். மருதாணி சிறந்த ஹேர் டையாகவும் செயல்படுகிறது. இந்த இயற்கை நிறம் கூந்தலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.