Advertisement Contact

உடலுக்கு பல நன்மைகளை அள்ளி வழங்கும் வெங்காயத்தாள்

உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது வெங்காயத்தாள் என்பது தெரியுங்களா. வெங்காயத்தாள் ஆங்கிலத்தில் ஸ்ப்ரிங் ஆனியன்ஸ் என அழைக்கப்படுகிறது. சீன உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் வெங்காயத்தாள் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது.

வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கந்தச்சத்து அதிகமாக உள்ளது. வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன. மேலும் காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ், நார்ச்சத்துக்கள் ஆகியவையும் உள்ளன.

வெங்காயத்தாள் கீரை வகையை சார்ந்தது. இதை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் வாசனை மற்றும் சுவைக்காவும் மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் பல நன்மைகள் உள்ளது.  வெங்காயத்தாளில் உள்ள பெக்ஷன் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. வெங்காயத்தாளினை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து அதற்கான தீர்வையும் அளிக்கிறது. கண்நோயால் பாதிக்கப்பட்டு பார்வை மங்கலாக இருப்பவர்கள் வெங்காயப்பூவை கசக்கி சாறு பிழிந்து எடுத்து இரண்டு சொட்டு சாறு காலை, மாலை கண்களில் விட்டு வந்தால் மூன்று நாட்களில் கண்பார்வை தெளிவடையும்.

வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள், செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வை அளிக்கிறது.