Advertisement Contact

இன்டர்நெட் சேவையை மேம்படுத்த கடலுக்கடியில் கேபிள் பதிக்க பேஸ்புக் திட்டம்

கடலுக்கடியில் கேபிள்... இன்டர்நெட் சேவையை மேம்படுத்தும் விதமாக கடலுக்கடியில் கேபிள் பதிக்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் துணை தலைவர் கெவின் சல்வோதரி கூறியுள்ளார்.

இந்த கேபிள் தென்கிழக்கு ஆசியா மற்றும் வடஅமெரிக்காவை இணைக்கும் விதமாக கடலுக்கடியில் பாதிக்கப்பட உள்ளது.

எக்கோ மற்றும் பிப்ரோஸ்ட் ஆகிய இரு கேபிள் திட்டங்களை கூகுளின் ஆல்பாபெட் மற்றும் சிங்கப்பூர், இந்தோனேசியாவை சேர்ந்த தொலை தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து பேஸ்புக் நிறுவனம் நிறைவேற்ற உள்ளது.

ஜாவா கடல் பகுதி வழியாக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்ததும் பணிகள் தொடங்கப்பட்டு 2023ம் ஆண்டுக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என கெவின் தெரிவித்துள்ளார்.