Advertisement Contact

மாசு மருவில்லா பொலிவான சருமத்தை பெற உதவும் கற்றாழை

மாசு மருவில்லா பொலிவான சருமத்தை பெறுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் சரும பிரச்சனைகள் அனைத்திற்கும் அருமருந்தாக கற்றாழை விளங்குகிறது.

கற்றாழை இலையை கத்திரித்து, அதன் முள்களை நீக்கிவிட்டு அதன் சாற்றுப்பகுதியை முகத்தின் பக்கவாட்டில் பூசிக்கொள்ளவும். இரண்டு இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு போதுமானது. தேவை எனில் இன்னும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம். இதில் கொஞ்சம் பாதாம் எண்ணெய் சேர்த்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் இரவு படுக்கச்செல்லும் முன் தடவிக்கொள்ளவும். இரவு அப்படியே விட்டு விட்டு காலை எழுந்ததும் கழுவிக்கொள்ளவும்.

எண்ணெய் பசை மிக்க சருமம் எனில், உங்கள் சருமத்தில் இருந்து கூடுதல் எண்ணெயை, பருக்களை அகற்ற கற்றாழை மாஸ்க் உதவும். ஒரு கோப்பையில் கற்றாழை சாற்றை எடுத்துக்கொள்ளவும். அதில் 10 முதல் 12 சொட்டு டீ டிரி ஆயில் விடவும். இதை நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை இரவு படுக்கச் செல்லும் முன், முகத்தில் பூசிக்கொண்டு, காலையில் கழுவிக்கொள்ளவும். வாரம் ஒரு முறை இவ்வாறு பயன்படுத்தவும்.

உலர் மற்றும் மங்கலான சருமத்தை மென்மையான சருமமாக மாற்ற, கற்றாழை, தேன் மற்றும் வெள்ளரி கொண்ட பேஸ் மாஸ்கை தயார் செய்யவும். இந்த மூன்று பொருட்களுமே நீர்த்தன்மை அளிக்க கூடியவை. இவற்றை பயன்படுத்தும் போது, சருமம் மென்மையாகி பொலிவு பெறுகிறது. ஒரு துண்டு வெள்ளரி, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் கொஞ்சம் கற்றாழையை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை பூசிக்கொண்டு 20 நிமிடம் விட்டு பின்னர் கழுவிக்கொள்ளவும்.

எல்லா வகையான சருமத்திற்கும் குறிப்பாக, வழக்கமான, எளிதில் பாதிக்கும் சருமத்திற்கு மிகவும் ஏற்ற பேஸ் மாஸ்கை தயார் செய்ய.. ஒரு கோப்பையை வாழைப்பழத்தை மேஷ் செய்து, 2 ஸ்பூன் கற்றாழை மற்றும் சில தொட்டு பன்னீர் விடவும். இதை நன்றாக கலந்து, முகத்தில் பூசிக்கொள்ளவும். உலர்ந்த பிறகு கழுவிக்கொள்ளவும்.