Advertisement Contact

நடிகர்கள் அக்‌ஷய் குமார், கோவிந்தாவுக்கு கொரோனா தொற்று

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நடிகர் கோவிந்தாவுக்கும் கொரோனா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்ஷய் குமார் ட்விட்டரில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், பெருந்தொற்று தடுப்பு விதிமுறைகளின் படி உடனடியாக தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னை அண்மையில் சந்தித்தவர்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள அக்‌ஷய் குமார், விரைவில் ஆக்சனில் இறங்குவேன் என்றும் கூறியுள்ளார்.

இதேபோல் பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான அறிகுறி தென்பட்டதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தனது வீட்டில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்புடன், தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக கூறி உள்ள நடிகர் கோவிந்தா, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளவும் வலியுறுத்தியுள்ளார்.