Advertisement Contact

ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்குப்பதிவு

குஷ்பு மீது வழக்குப்பதிவு... ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளரும், நடிகையுமான குஷ்பு மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஆங்காங்கே ஒரு சில சலசலப்புகள் ஏற்பட்டாலும் கூட ஒட்டுமொத்தமாக பெரிய அளவில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இந்த தேர்தலில் பலரும் மக்களை கவனிக்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை குஷ்பு மீது ஆயிரம் விளக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தலில் போது தங்களது கட்சி சின்னத்தை விளம்பரப்படுத்தாதபடி நடந்து கொள்ள வேண்டும் என்பது விதி. ஆனால் குஷ்பு தனது காரில் தாமரை சின்னத்துடன் கூடிய பாஜக கொடியை கட்டிச் சென்றதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதே போல் கோவையில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தனது புடவையில் பாஜக சின்னத்தை பொருத்தி இருந்தது குறித்து திமுகவினர் புகார் அளித்துள்ள நிலையில், குஷ்பு மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.