Advertisement Contact

பிரபல தெலுங்கு நடிகருடன் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வரும் நடிகை

ஒல்லிபிச்சான் நடிகர் இரட்டை வேடத்தில் நடித்த அரசியல் படத்தில் தம்பிக்கு ஜோடியாக நடித்த நடிகை பிரபல நடிகர் ஒருவருடன் லிவின் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார் என்று கோலிவுட்டில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது.

இந்த நடிகை இப்படி லிவிங் டுகெதர் முறையில் வாழ்வதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து வீடு ஒன்றை ஒத்திக்கு வாங்கி இருக்கிறாராம். சக்கை போடு போட்ட மலையாள படத்தில் நடித்த நடிகை தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட அதே படத்தில் அதே கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் தமிழில் ஒல்லிபிச்சான் நடிகர் இரட்டை வேடத்தில் நடித்த அரசியல் படத்தில் தம்பிக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.

தற்போது தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் இந்த நடிகை பிரபல தெலுங்கு நடிகர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டு லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றாராம்.

ஆனால், இந்த உறவு திருமணத்தில் முடியுமா என்றால், அது கேள்விக்குறிதான் என்று தெலுங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷயம் தற்போது கோலிவுட் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்படுகிறது.