Advertisement Contact

வயதாவதால் சம்பளத்தை குறைக்க முடிவு செய்த சின்ன நம்பர் நடிகை

வயதாவதால் படவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் சம்பளத்தை குறைத்துக் கொள்ள சின்ன நம்பர் நடிகை முடிவு செய்துள்ளாராம்.

தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வந்த சின்ன நம்பர் நடிககை,  தற்போது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறாராம். அவருக்கு வயதாகி வருவதால் முன்னணி நடிகர்கள் அவருடன் நடிக்க மறுக்கிறார்களாம்.

இதனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையை தேர்ந்தெடுத்து நடித்த அவர் அதிலும் தோல்வியை தழுவினார். தற்போது வேறு வழியின்றி இளம் நடிகர்களுடன் நடிக்க சம்மதம் தெரிவித்து வருகிறாராம். மேலும் அவர் தனது சம்பளத்தையும் கணிசமாக குறைத்து கொள்ளவும் முடிவு செய்து உள்ளாராம். நடிகையின் இந்த அதிரடி மாற்றம் தயாரிப்பாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளதாம்.