Advertisement Contact

ஆஸ்திரேலியா டி20 பிரிமியர் லீக் தொடரில் யுவராஜ் விளையாடலாம் என தகவல்

ஆஸ்திரேலியாவில் வருகிற நவம்பர் மாதம் டி20 பிரிமியர் லீக் தொடர் துவங்கவுள்ளது. இதில் யுவராஜ்சிங் விளையாடலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

2019 ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார் யுவராஜ் சிங், இதனையடுத்து சிலபல தொடர்களில் விளையாடினார். குறிப்பாக ஐபிஎல், குளோபல் டி20, டி10 லீகிலும் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 லீகான பிக்பாஷிலும் ஆட பேச்சு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை, பிக்பாஷ் லீகில் ஒரு இந்திய வீரர் கூட ஆடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஆஸ்திரேலியாவில் வருகிற நவம்பர் மாதம் டி20 பிரிமியர் லீக் தொடர் துவங்கவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள மெர்போர்னைச் சேர்த்த முல்கிரேவ் கிளப் அணி, யுவராஜ் சிங், பிரையன் லாரா, கிறிஸ் கெய்ல் போன்றவர்களை தங்கள் பக்கம் இழுக்கத் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இலங்கையைச் சேர்ந்த திலகரத்னே தில்சன், உபுல் தராங்கா ஆகியோர் ஏற்கனவே முல்கிரேவ் அணிக்காக ஒப்பந்தமாகிவிட்டனர்.

தற்போது யுவராஜ் போன்றவர்களுடன் பேச்சு வார்த்தை இறுதிக் கட்டத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. முன்னதாக யுவராஜ் சிங் பஞ்சாப் கிரிக்கெட் கிளப்புடன் இணையப் போவதாக செய்திகள் எழுந்தன. ஆனால் இவர் வெளிநாட்டு லீக்குகளில் ஆட கையெழுத்திட்டதால் இவரை இந்தியாவில் விளையாட பிசிசிஐ அனுமதிக்கவில்லை.


இந்த நிலையில், ஆஸ்திரேலிய லீக் போன்ற T20 லீக்குகளில் ஆடினால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என்பது பிசிசிஐ-யின் கறார் விதிமுறைகள் ஒன்றாகும். இந்த நிலையில், யுவராஜ் சிங் இந்திய கிரிக்கெட்டிலிருந்து புறந்தள்ளினாலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் கிளப் ஒன்று இவரை மீண்டும் ஆட வைக்க முன் வந்துள்ளது.