Advertisement Contact

உடல் எடையை குறைக்கணுமா... அப்போ போடுங்க பற்களுக்கு பூட்டு

பற்களுக்கு பூட்டு... நியூசிலாந்தில் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்காக பற்களை பூட்டுவது போன்ற சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மேல் தாடை மற்றும் கீழ் தாடையிலுள்ள பற்களை இந்த சாதனம் பூட்டி விடுவதால், 2 மில்லிமீட்டருக்கு மட்டுமே வாயை திறக்க முடியும். இதனால் நீராகாரத்தை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.

மருத்துவ காரணங்களுக்காக உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் நொறுக்கு தீனி சாப்பிடுவதை கட்டுப்படுத்த இந்த சாதனம் உதவுதாக கூறும் மருத்துவர்கள், இந்த கருவியால் சுவாசமோ அல்லது பேசுவதோ தடை படாது என தெரிவிக்கின்றனர். இதன் விலை சுமார் 17 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.