Advertisement Contact

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 211 பேர் கொண்ட அணியை அனுப்பும் நியூசிலாந்து

211 அபேர் கொண்ட அணி பங்கேற்பு...டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் 211 பேர் கொண்ட நியூசிலாந்து அணி பங்கேற்கிறது.

ஒலிம்பிக்ஸ் போட்டிக்காக இத்தனை பேர் கொண்ட அணியை நியூசிலாந்து அனுப்புவது இது முதல் முறையாகும். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை டோக்கியோவில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் 22 விளையாட்டுகளில் நியூசிலாந்து அணியின் 211 போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களில் 101 பேர் வீராங்கனைகள். 211 பேரில் 118 பேர் ஒலிம்பிக்ஸுக்கு அறிமுகமாகிறார்கள்.