Advertisement Contact

மருத்துவக் குணங்கள் நிறைந்த யானை நெருஞ்சில் பற்றி தெரிந்து கொள்வோம்

யானை நெருஞ்சில் இலைகள், காய்கள், வேர், தண்டு அனைத்தும் மருத்துவகுணம் கொண்டது என்பது தெரியுங்களா. இதனால் உடலில் ஏற்படும் எந்த மாதிரியான நோய்களை குணப்படுத்த இயலும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

சிறுநீரகத்தொற்றால் ஏற்படக்கூடிய சிறுநீர் எரிச்சல், அடிவயிற்று வலி, சிறுநீர் மஞ்சலாக செல்வது ஆகியவை குணப்படுத்தப்படுகிறது. யானை நெருஞ்சி இலையின் சாறு சிறுநீரகத்தில் உருவாகும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. சிறுநீரகத்தை பாதுகாக்கிறது.
 
பெண்களுக்கு ஏற்படும் வௌளைப்படுதல், சிறுநீர் எரிச்சல், பால்வினை தொற்றுநோய் போன்ற நோய்களை குணப்படுத்தும். உடலில் உள்ள அதிக கொழுப்புகளை குறைத்து இரத்தக்குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. வயிற்றில் ஏற்படக்கூடிய புண்ணை குணப்படுத்துகிறது. மேலும் உடலில் வலி, வீக்கம் ஆகியவற்றை சரி செய்கிறது.

இது நோய் எதிர்ப்புத்திறனை உருவாக்கி செல்லின் வளர்சிதை மாற்றத்தினை சீர்படுத்தியாக செயல்படுகிறது. கல்லீரலை பலப்படுத்தி சீராக வைக்கிறது. ஆண்களுக்கு வயோதிகக்காலத்தில் ஏற்படும் பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினை சீர் செய்து பிராஸ்டேட் சுரப்பியை சீராக சுரக்கச் செய்கிறது.

யானை நெருஞ்சில் உடலை குளிர்ச்சிப்படுத்தும், வெண் குஷ்ட ரோகம், உடல் எரிச்சல், தாகம், பித்த மயக்கம் இவைகளைப் போக்கும்.

உண்ணும் முறை: இலை, காம்பு, காய் அனைத்தும் பிடுங்கி ஒரு கையளவு , 250 மிலி சுத்தமான நீரில் போட்டு 30 நிமிடம் வைத்தால் அந்த நீரானது எண்ணெய் அல்லது குழம்பு போல் ஆகும். இதைக் குடித்தால் மேற்கண்ட நோய்கள் போகும்.