Advertisement Contact

ஷாரூக்கான் ஜோடியாக நயன்தாரா நடிப்பதை உறுதி செய்த நடிகை கஸ்தூரி

இந்தியில் அட்லி இயக்கத்தில், ஷாரூக்கான் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளார் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

'பிகில்' படத்துக்கு பிறகு இந்தி நடிகர் ஷாரூக்கான் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் அட்லி. நீண்ட நாட்களுக்கு முன்பே இந்தப் படம் குறித்து அறிவிக்கப்பட்டும், இதுபற்றி மேற்கொண்டு எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தில் நயன்தாரா நடிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை. 

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில், ''பக்ரீத் நாளில் ஒரு முக்கிய செய்தி, வெற்றிக்கூட்டணியான ஷாரூக்கான், நயன்தாரா அட்லீ, ஏ.ஆர்.ரஹ்மான் இணையவிருக்கின்றனர். ஒரே படத்தில் எனக்கு விருப்பமான அனைவரும் நடிக்கின்றனர்'' என்று பதிவிட்டுள்ளார்.