Advertisement Contact

டி-20 போட்டியில் பங்கேற்க வங்கதேசத்துக்கு பயணம் ஆகும் ஆஸ்திரேலியா அணி

மேற்கிந்தியத் தீவுகளைத் தொடர்ந்து வங்கதேசத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

வரும் ஆகஸ்ட் 3 மற்றும் 9 ஆகிய தேதிகளுக்கு இடையே அனைத்து ஆட்டங்களும் மிர்பூரில் நடைபெறுகின்றன. 2017-இல் 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடிய பிறகு ஆஸ்திரேலியா வங்கதேசம் செல்வது இது முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜூலை 29-ம் தேதி டாக்கா சென்றடைகிறது. பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்பு மூன்று நாள்களுக்கு வீரர்கள் விடுதியிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள். செப்டம்பர் மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரவுள்ள நிலையில் பெரும்பாலான அணிகள் டி20 தொடர்களில் அதிக கவனம் செலுத்துகின்றன. ஆஸ்திரேலிய அணியே இந்தத் தொடருக்கு முன்பு மேற்கிந்தியத் தீவுகளில் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.