Advertisement Contact

அப்பா சிவகுமார் நடித்த படத்தின் தலைப்பில் நடிக்கும் மகன் சூர்யா

அப்போ அப்பா நடித்த படத்தின் தலைப்பில் இப்போது மகன் நடிக்கிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சரண்யா பொன்வண்ணன் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என்ற தலைப்பில் ஏற்கனவே நடிகர் சிவக்குமார் நடிப்பில் ஒரு படம் வெளியாகியுள்ளது.

ஆமாங்க...கடந்த 1977ம் ஆண்டு சிவகுமார் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படம் வெளியாகியுள்ளது. தற்போது தந்தையின் பட தலைப்பை தான் மகன் பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.