Advertisement Contact

சந்திரயான்-3 திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தகவல்

மத்திய இணை அமைச்சர் தகவல்...நிலவை ஆய்வு செய்வதற்கான, சந்திரயான்-3 விண்கலம் 2022-ம் ஆண்டின் 3-ம் காலாண்டில் விண்ணில் செலுத்தப்படக் கூடும் என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுத்துப் பூர்வமாக அவர் அளித்த பதிலில், சந்திரயான்-3 திட்டத்திற்கான பணிகள் கொரோனா பெருந்தொற்று பரவலால் பாதிப்படைந்ததாக குறிப்பிட்டார்.

எனினும், வீடுகளிலிருந்து செய்யக்கூடிய அனைத்துப் பணிகளும் பொதுமுடக்கத்தின் போதும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது முதல், சந்திரயான்-3 திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக ஜிதேந்திரசிங் தெரிவித்தார்.