Advertisement Contact

விவசாய நிலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம்; தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய பரிந்துரை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே விவசாய நிலத்தில் திடீர் என பள்ளம் ஏற்பட்டது. இதுகுறித்து தொல்லியல் துறையினர் விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெத்தநாயக்கன்பாளையம் கிளாக்காடு பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவர் வழக்கம் போல் விவசாய நிலத்தில் டிராக்டரால் உழுதுக்கொண்டிருந்த போது திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.

இதுகுறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த அதிகாரிகள், பள்ளம் முதுமக்கள் தாழி அல்லது பண்டைய காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கம் போல் தெரிவதாக கூறி ஆய்வு செய்ய தொல்லியல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.