Advertisement Contact

ஆன்மீக அதிசயங்களில் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் தங்கமணி குருசாமி

ஆன்மீகத்தின் ஆழம் யாரும் அறிய முடியாத ஒன்று. அப்படிப்பட்ட ஆன்மீக விஷயங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் பூதலூரை சேர்ந்த தங்கமணி குருசாமியும் ஆன்மீக ஆச்சரியத்தில் ஒருவர்.

ஆன்மீகத்தில் தன்னை மிகவும் ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டு கடவுள் பணியே முக்கியம் என்று இருப்பவர். இறைவனின் தொண்டே தனது வாழ்வின் முக்கிய பணி என்று சிறப்பான செயல்பட்டு வருகிறார் தங்கமணி குருசாமி.

இவருக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் ஏற்படும் ஆன்மீக நிகழ்வுதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. இயற்கையின் அற்புதங்களை ஆராய்ந்து இப்படிதான் என்று கணித்து விட முடியாதல்லவா. அதுபோல்தான் பூதலூரை சேர்ந்த தங்கமணி குருசாமிக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஏற்படும் ஆன்மீக சம்பவங்களின் நிகழ்வும் உள்ளது. சரியாக ஆடி மாதம் முதல் வெள்ளியன்று நள்ளிரவு தங்கமணி குருசாமிக்கு இனி வரும் நாட்களில், மாதங்களில் நடக்கும் செயல்கள் குறிப்புகள், கேள்விகள் தோன்றும்.

அதற்கு விடையும் கிடைக்கும். அதை அப்படியே ஒரு பேப்பரில் எழுதி வைத்து கொள்கிறார். ஒரு வருடத்தில் என்ன நடக்கும்? அதுவும் முக்கியமான நிகழ்வுகள் குறித்து காட்சிகள் போன்று தெரியும். அதனால் ஏற்படும் சம்பவங்களும் தெளிவாக தெரியும். கடந்த 2018ம் ஆண்டில் இவர் எழுதி வைத்தவற்றில் 90 சதவீதம் வரை அப்படியே நடந்துள்ளது. அதேபோல் 2019, 2020 ஆண்டுகளிலும் நடந்துள்ளது. 

இந்தாண்டு ஆடி மாதம் முதல் வெள்ளியன்று ஏற்பட்ட நினைவு அலைகளை குறித்து வைத்துள்ளார். அதில் சில முக்கியமானவை:

இரண்டு முறை அணைகள் நிரம்பும். விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள். புதிய அணை கட்ட வாய்ப்பு ஏற்படும். ராமர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடக்கும்.  புதிய நோய் உருவாகும். சிறுவனர்கள், குழந்தைகள் இறப்பு நிகழும். நீட் தேர்வு தமிழகத்தில் உண்டு. நீர் நிலைகள் ஒப்பந்தம் ஏற்படும். அதிமுகவுக்குள் சிறுசிறு கலக்கம் ஏற்படும்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு அதிக இடம் கிடைக்கும். திருவிழாக்கள் நடைபெறும். நெல், கரும்பு, உளுந்து அதிகம் விளையும். எலிகளால் நஷ்டம் ஏற்படும். தீ பயம், வெப்பம் அதிகம் ஏற்படும். பூமி அதிர்வு ஏற்படும். புதிய அரசியல் ஏற்படும்.

பனிப்பாறைகள் உடைப்பு ஏற்படும். ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம் இருக்கும். சாலை விபத்துக்கள் அதிகரிக்கும். வாலிபர்கள் கவனமாக இருக்க வேண்டும். விண்வெளியில் புதியவை கண்டுபிடிக்கப்படும். இராமேஸ்வரம் கோயில் காசிக்கு நிகரான கோயிலாக அமைக்கப்படும். புதிய வேலை வாய்ப்புகள் ஏற்பட்டு இளைஞர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வாறு நடப்பாண்டில் நிகழும் பல்வேறு சம்பவங்கள் தெரிய வந்துள்ளது.  

இதுகுறித்து தங்கமணி குருசாமி கூறுகையில், ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இறைவன் அருளால் அந்த ஆண்டில் நடப்பவை பற்றி முன்கூட்டியே தெரிந்து அதை அப்படியே எழுதி வைத்து கொள்கிறேன். மக்களின் நலன் உயர்வடைய வேண்டும் என்பதுதான் எனது வேண்டுதல் என்றார். 

இவர் தர்ம ரட்ஷன சமிதியில் மாவட்ட துணைத்தலைவராகவும், ஐயப்ப தர்ம சேவா சங்கத்தில் மாநில அமைப்பு செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.