Advertisement Contact

கேரளாவில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை 

கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு...கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழைக்கு வீடு இடிந்த விபத்துகளில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

வீடுகள் வயல்கள், வாழைத் தோப்புகள் என கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மலப்புரம் கண்ணூர் பகுதிகளில் பெய்த கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன. மூணாறில் பலத்த மழை பெய்ததன் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கேரளத்தின் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.