Advertisement Contact

மிச்சிசாகுவாவில் தீவிபத்தில் சிக்கி பெண் பலி

தீவிபத்தில் சிக்கி பெண் பலி...மிஸ்ஸிசாகுவா நகரில் தீ விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்விபத்து சம்பவம் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் பீல் பிராந்தியத்தின் north of Dundas Street West அமைந்துள்ள தி Credit Woodlands பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் ஆறு பேர் இருந்துள்ளதாகவும் தீ விபத்து ஏற்பட்ட போது ஐந்து பேர் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் குறித்த பெண் மட்டும் சிக்கி கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டாம் மாடியில் சிக்கியிருந்த பெண்ணை தீயணைப்புப் படையினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.