Advertisement Contact

இயக்குனர் பால்கியுடன் சென்று விஜய் சேதுபதியை சந்தித்த துல்கர் சல்மான்

நடிகர் விஜய் சேதுபதியுடன் சந்திப்பு...இயக்குநர் பால்கியுடன் நடிகர் விஜய் சேதுபதியை மலையாள நடிகர் துல்கர் சல்மான் நேரில் சந்தித்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் துல்கர் சல்மான் தற்போது இந்தியில் சுப்: ரிவெஞ் ஆஃப் தி ஆர்டிஸ்ட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குநரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான பால்கி இயக்கி வருகிறார். இது துல்கர் சல்மான் நடிக்கும் மூன்றாவது இந்திப் படமாகும்.

இந்நிலையில் இந்தி வெப் சிரீஸில் நடித்து வரும் விஜய் சேதுபதியை துல்கர் சல்மான் நேரில் சந்தித்துள்ளார். அப்போது இயக்குநர் பால்கி, இயக்குநர் ராஜ் மற்றும் டீ.கே, சீதா மேனன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். எதற்காக இந்த சந்திப்பு நடந்தது என்பது குறித்து அறிவிக்கப்ப்டவில்லை. 

இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள துல்கர், விஜய் சேதுபதி அண்ணா, ராஜ் & டீ.கே, சீதா மேனன் ஆகியோரை இயக்குநர் பால்கியுடன் சேர்ந்து சந்தித்து மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.