Advertisement Contact

தீபாவளி படங்கள் ரேஸில் பங்கேற்கும் சசிகுமாரின் திரைப்படம்

தீபாவளி ரேஸில் சசிகுமார்... சிம்புவின் மாநாடு படம் தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கியதை அடுத்து, தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு தீபாவளி ரசிகர்களுக்கு குதூகலமாக அமையவுள்ளது. இதுவரை இல்லாத வகையில் முன்னணி நடிகர்கள் படங்கள் என பல படங்கள் தீபாவளியை முன்னிட்டு வெளிவரவுள்ளன. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

திரையரங்குகளில் ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த', விஷால் மற்றும் ஆர்யா நடிக்கும் 'எனிமி' ஆகிய படங்கள் வெளிவருகின்றன. அதேபோல ஓடிடி தளத்தில் அருண் விஜய்யின் 'வா டீலு', சூர்யாவின் 'ஜெய் பீம்' படங்கள் வெளிவருகின்றன.

முன்னதாக சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' திரைப்படமும் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தன. ஆனால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ள்ட்டோர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மாநாடு வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.

இந்த வெற்றிடத்தை பயன்படுத்தும் விதமாக சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் தீபாவளி வெளியீடாக வருகிறது. ஆனால் இப்படம் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி-யில் வெளிவரவுள்ளது. இது சசிகுமார் ரசிகர்களிடையே உற்சாகத்தை அளித்துள்ளது.