Advertisement Contact

அரசியல்வாதியின் மீது கோபத்தில் உள்ள இளம்பெண்ணின் குடும்பத்தினர்

இளம் பெண் குடும்பத்தினர் கோபம்...கனேடிய அரசியல்வாதி ஒருவர் இளம்பெணின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தியதால், அவரது குடும்பத்தினர் கடும் கோபத்தில் உள்ளனர்.

ஒன்ராறியோவின் கேம்ப்ரிட்ஜ் நகரைச் சேர்ந்த ஃபரிசா நவாப் (20), அபூர்வ நோய் ஒன்றின் காரணமாக செப்டம்பர் 11ஆம் திகதி இறந்துபோனார். இதற்கிடையில், லானார்க்-ஃப்ரண்டெனாக்-கிங்ஸ்டனுக்கான மாகாண நாடாளுமன்ற உறுப்பினரான ராண்டி ஹிலியர், தனது சமூக ஊடக பக்கத்தில், ஃபரிசா முதலான 10 பேரின் புகைப்படங்களை பதிவிட்டு, அவர்கள் எல்லாரும் கொரோனா தடுப்பூசி பெற்றதைத் தொடர்ந்து எதிர்வினை ஏற்பட்டு இறந்து போனதாக குறிப்பிட்டுள்ளார்.

உடல் நலமின்றி இறந்துபோன ஃபரிசாவின் புகைப்படத்தை பொறுப்பிலிருக்கும் ஒரு நபர் தவறாக பயன்படுத்தியதால் அவரது குடும்பத்தினர் கடும் கோபம் அடைந்துள்ளனர். அவரது சகோதரியான அம்மாரா நவாப், இது முற்றிலும் பொய் என்றும், தன் சகோதரி மரபியல் நோய் ஒன்றின் காரணமாக இறந்துபோனதாகவும் தெரிவிக்கிறார்.

தங்கள் சகோதரியின் புகைப்படத்தை அனுமதியின்றியும், தவறான நோக்கிலும் பயன்படுத்திய  ராண்டி ஹிலியர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும், அவர் அந்த புகைப்படம் முதலான போலித் தகவல்களை அகற்றவேண்டும். தங்கள் குடும்பத்துக்கு  தீரா இழுக்கை ஏற்படுத்திவிட்டதாக கோபத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக  ராண்டி ஹிலியர் நேரடியாக விளக்கம் அளிக்கவில்லை.