Advertisement Contact

பைக்கில் சாய்ந்தபடி தார் பாலைவனத்தில் ஓய்வெடுக்கும் அஜித்

செம வைரல்...தார் பாலைவனத்தில் பைக்கில் சாய்ந்தபடி ஓய்வெடுக்கும் அஜித்'தின் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள 'வலிமை' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்த கையோடு, தமது நீண்ட நாள் கனவான உலகம் முழுவதும் பைக்கில் சுற்றும் பயணத்தை அஜித் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின் நடுவில் அவ்வபோது பகிரப்படும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
இதில் நேபாள தலைநகர் காத்மண்டு சென்று திரும்பும் வழியில் உள்ள தார் பாலைவனத்தில் அஜித் ஓய்வெடுக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. பைக்கில் சாய்ந்தவாறு தண்ணீர் அருந்தும் அஜித்தின் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.