Advertisement Contact

டெல்லியில் ஊரடங்கு உத்தரவை மீறிய தம்பதி கைது

ஊரடங்கை மீறிய தம்பதி கைது... டெல்லியில் ஊரடங்கு உத்தரவை மீறிய தம்பதி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தரியாகஞ்ச் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது காரில் வந்த கணவன், மனைவி முகக்கவசம் அணியாமல் இருந்ததால் அவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

இதனைக் கண்ட அந்தப் பெண் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து காருக்குள் இருந்தாலும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு என்று போலீசார் கூறியும், அதனைக் கேட்காமல் இருவரும் மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.