Advertisement Contact

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

சந்திப்பு... இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) வெளியுறவு அமைச்சா் ஷேக் அப்துல்லா பின் ஸயத் அல் நஹ்யானை நேற்று சந்தித்தாா்.

கடந்த ஆண்டு நவம்பா் 25, 26-ஆம் தேதிகளில் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொண்டாா். இந்நிலையில் அவா் மீண்டும் அந்நாட்டுக்கு சென்றுள்ளாா். அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் ஷேக் அப்துல்லா பின் ஸயதை நேற்று சந்தித்த அவா், இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்திய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

ஜெய்சங்கா் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள அதேவேளையில், அந்நாட்டுக்கு 3 நாள் பயணமாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் ஷா மமூத் குரேஷி சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுடனான வா்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஷா மமூத் குரேஷி ஐக்கிய அரபு அமீரகத் தலைவா்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க மூன்றாவது நாட்டின் தலையீட்டை பாகிஸ்தான் வரவேற்கிறது என்று குரேஷி கூறியதாக ஐக்கிய அரபு அமீரக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் அந்நாட்டுக்கு ஒரே நேரத்தில் சென்றுள்ள ஜெய்சங்கா், குரேஷி இடையே சந்திப்பு நடைபெறுமா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.