Advertisement Contact

கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தி 10 மடங்கு அதிகரிக்கப்படும் என மத்திய அமைச்சர் தகவல்

10 மடங்கு அதிகரிக்கப்படும்... வரும் செப்டம்பா் மாதத்துக்குள் கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தி 10 மடங்கு அதிகரிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:

கொரோனா சிகிச்சையின்போது அளிக்கப்படும் ரெம்டெசிவிா் மருந்தின் தயாரிப்பு மே மாதத்திற்குள் மாதந்தோறும் 74.1 லட்சமாக இரட்டிப்பாக்கப்படும். அந்த மருந்தின் தயாரிப்பை அதிகரிப்பதற்கு 20 உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மருந்தை தவறாக பயன்படுத்தவும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கவும் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறிய மாநிலங்களுக்கு 7 நாள்களுக்கு ஒருமுறையும், பெரிய மாநிலங்களுக்கு 4 நாள்களுக்கு ஒருமுறையும் கொரோனா  தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுகின்றன. வரும் செப்டம்பருக்குள் கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தி 10 மடங்கு அதிகரிக்கப்படும்.

மத்திய அரசின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் பிரத்யேக  கொரோனா வாா்டுகள், தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தாா்.