Advertisement Contact

ஜிம்பாப்வேயில் 320 கைதிகளை விடுதலை செய்த அரசு

கொரோனா பரவலை தடுப்பதற்காக 320 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜிம்பாப்வேயில் கொரோனாவின் இரண்டாவது அலை எழுந்துள்ள நிலையில், சிறைகளில் அந்த நோய் பரவுவதைத் தடுப்பதற்காக 320 கைதிகளை அரசு விடுதலை செய்துள்ளது. அரசுக்கு எதிரானவா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதையடுத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.