Advertisement Contact

முகக்கவசம் அணிய வேண்டாம் என்று இஸ்ரேல் அறிவிப்பு

முகக்கவசம் அணிய வேண்டாம்... உலகம் முழுவதும் கொரோனாவால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் முகக்கவசம் அணிய வேண்டாம் என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவை தடுக்க முகக்கவசம், தனிமனித இடைவெளி தான் முக்கியம் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் பொது இடங்களிலும், பள்ளிகளிலும் முகக் கவசம் அணியத் தேவையில்லை என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற விதி ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேலில் அமலில் இருந்த நிலையில் இப்போது தளர்த்தப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள 93 லட்சம் மக்களில் 53 சதவிகிதம் மக்களுக்கு இரு தவணை தடுப்பூசி போட்டு இரு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் இத்தளர்வை இஸ்ரேல் அறிவித்துள்ளது .

அதே நேரத்தில் மூடப்பட்ட அறைகளிலும் அதிக கூட்டம் கூடும் இடங்களில் மட்டும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது . இதன் மூலம் தடுப்பூசி போட்டுக் கொள்வது முக்கியம் என்பதை இஸ்ரேல் அரசு உணர்த்தியுள்ளது.