Advertisement Contact

13 வகையான மளிகை பொருட்களை இலவசமாக வழங்க தமிழக அரசு திட்டம்

கொரோனா நிவாரணமாக 13 வகையான மளிகை பொருட்களை இலவசமாக தமிழக அரசு வழங்க உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் ரேஷன் கடையில் கொரோனா நிவாரண பொருட்களாக 13 வகையான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோதுமை, உப்பு, ரவை, பருப்பு, கடுகு, மஞ்சள் தூள், மிளகாய்பொடி, குளியல் மற்றும் துணி சோப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2.11 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.