Advertisement Contact

கொரோனா சிகிச்சை மையத்திலிருந்து நோயாளி தப்பியோடியதால் பரபரப்பு

தஞ்சையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி அங்கிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்து உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 36 வயதுள்ளவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அந்த கொரோனா நோயாளி வல்லத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து துணை தாசில்தார் மரியஜோசப் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.