Advertisement Contact

சுவிஸ் வங்கியில் இந்திய நிறுவனங்கள் வைத்துள்ள பணம் அதிகரிப்பு

இந்திய நிறுவனங்கள் பணம் அதிகரிப்பு... இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் வைத்துள்ள பணம் இருபதாயிரத்து 700 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

2020ஆம் ஆண்டு இறுதியில் சுவிஸ் நேசனல் பாங்கின் புள்ளி விவரங்களில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வாடிக்கையாளர்கள் சுவிஸ் வங்கியில் பணம் போடுவது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகக் குறைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

சுவிஸ் வங்கிகளில் அதிகப் பணம் வைத்துள்ள வெளிநாடுகளின் பட்டியலில் இந்தியா 51 ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகியன இந்தியாவுக்குப் பின்னும், சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, சவூதி அரேபியா ஆகியன இந்தியாவுக்குப் முன்னும் உள்ளன.