Advertisement Contact

வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

வாள்வீச்சு வீராங்கனைக்கு நிதியுதவி... ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

பாரம்பரிய கலையான வாள்வீச்சில் கைத்தேர்ந்த பவானி தேவி, உலக அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தேர்வாகியுள்ள பவானிதேவி, தற்போது இத்தாலியில் பயிற்சி பெற்று வருகிறார்.

இந்த நிலையில், மேலும் சில பயிற்சிகள் பெற நிதியுதவி அளிக்குமாறு அரசுக்கு பவானிதேவி வைத்த கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் அவரது தாயாரிடம் 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.