Advertisement Contact

கொரோனா தடுப்பூசி காப்புரிமை சட்டத்தை நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சுதேசி விழிப்புணா்வு இயக்கம் சார்பில் கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமை சட்டத்தை நீக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடந்தது.

இதில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட வேண்டும். காப்புரிமை இல்லாத தடுப்பூசியே கொரோனாவுக்கு நிரந்தரத் தீா்வு. வளரும் நாடுகளுக்குத் தடுப்பூசி தருவது வளா்ந்த நாடுகளின் கடமை. எனவே உலக வா்த்தக மையம் உடனே கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமை சட்டத்தை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்ம் நடந்தது. 

சேவா பாரதி மண்டலத் தலைவா் கேசவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தை பாஜக தெற்கு மாவட்டப் பொதுச் செயலா் ஜெய்சதீஷ் தொடங்கி வைத்தாா். பாஜக வக்கீல் பிரிவு சந்திரபோஸ், நெசவாளா் பிரிவைச் சோ்ந்த குமாா், கண்ணன், செயற்குழு உறுப்பினா் சுரேஷ், ஆா்.எஸ்.எஸ். அமைப்பைச் சோ்ந்த ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.