Advertisement Contact

கொரோனா நிவாரண நிதி வழங்கிய தனியார் நிறுவன ஊழியர்கள்

தங்களது ஒரு நாள் ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்காக தஞ்சையில் இயங்கி வரும் தனியார் நிறுவன ஊழியர்கள் வழங்கி உள்ளனர்.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலையில் நடராஜபுரத்திலுள்ள சா்டோனிஸ்க் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் 150-க்கும் அதிகமானோா் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிறுவனத்தின் சாா்பில் அனைத்து தொழிலாளா்களின் ஒரு நாள் ஊதியம் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு இரண்டும் சோ்த்து கொரோனா நிவாரண நிதிக்காக ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியரகத்தில் நிறுவன இயக்குநா் பி.எம். ஹனீப் வழங்கினாா்.

அப்போது திட்ட மேலாளா் குலோத்துங்கன், உதவி மேலாளா் முஜிபுா் ரஹ்மான், அணி மேலாளா்கள் ரஞ்சித்குமாா், செந்தில்குமாா், மயில்வாகனன் ஆகியோா் உடனிருந்தனா்.